
உனை பார்க்கையில்
மனதில் ஓர் கவிதை பிறந்தால்சொல்லலாம்
ஓராயிரம் கவிதைகள் பிறக்குதே
எதை நான் என் இதழ்களில் முத்தமிட
உன் அழகோடு போராடி
என் விழிகள் நிமிடம் ஒரு முறை தோற்கின்றன
இப்போராட்டத்தில் நீ புறமுதுகிட்டாலும்
என் விழிகளே தோற்கின்றன
உன் பின்னழகில்
பாரடி
உன் முகம் தெரியவில்லை என்று
என் கை ரோமங்கள் கூட
தலை தூக்கிப்பர்ர்கின்றன
உன் குரலை கேட்கும் ஆசையில்
என் செவிகள் எனது சப்தத்தை கூட ஏற்க மறுக்கின்றன
நிலவின் நிழல் கூட
அழகாய் இருக்கும் என்று
உன் நிழலை பார்த்த பின்புதானடி
நான் தெரிந்து கொண்டேன்
போதுமடி
நான் நானாக இல்லை
என்னை திருப்பிக்கொடு
இல்லையேல் முழுவதுமாய் ஏற்றுக்கொள்.
Wednesday, August 13, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment