மடம்

Tuesday, August 4, 2009

 

தெருவில் ஓர் பயித்தியக்காரன் தலையில் கல்லை சுமந்தபடி

அங்கும் இங்குமாய் திரிய
வழியில் கண்டவரெல்லாம்
அவனை பார்த்து சிரிக்க
அவன் அவர்களை பார்த்து சிரித்தான்
உடம்பில் உயிரை சுமந்து
அர்த்தமின்றி பிழைக்கும்
பயித்தியக்காரர்கள்
என்றெண்ணி

0 comments: