எல்லாம் இருந்தபோதும் நிலவு இல்லாத வானத்தை
ஏனோ ரசிக்கப் பிடிக்கவில்லை,
ஓர் துணை இல்லாத வாழ்வையும் அப்படியே உணர்கிறேன் நான்,
பயணத்தில் என் உடன் வர ஓர் உடல் தேடவில்லை
உள்ளவரை மறவாத பயணமாய் என்னில் கலந்துவிட ஓர் உயிர் தேடுகிறேன்,
உனை கண்டதும் காதல் வயப்படவில்லை
உண்மையில் காதல் என்ன வென்று நான் இதுவரை அறிந்ததில்லை,
பலமுறை பார்த்துருக்கிறேன் ஆனால் ரசித்ததில்லை
மனம் ஏதும் என்னிடம் சொன்னதில்லை,
ஏனோ இன்று உனை பார்க்காமல்
இருக்க முடியவில்லை மனம் தவிக்கிறது,
நீ அழகாய் இருக்கிறாய் என்பதால் அல்ல
என்னை உன் ரசிகனாய் மாத்திவிட்டாய் ஆதலால்,
உன்னிடம் என்ன பிடித்திருக்கிறது என்று என் மனதிடம் கேட்டேன்
அமைதியாய் சிரித்தது,
உன்னை விட அவளை எனக்கு பிடிக்கும் என்றது.
என்ன சொல்ல நினைக்கிறேன்
என்னக்கே ............... புரியவில்லை,
உன் உடலின் அங்கங்களை வர்ணிக்க
கவிதை எழுத முயற்சிக்கவில்லை,
தியானம் செய்கையில் வாழ்வின் இன்பமா நிமிடங்கழலில் மீண்டும் வாழ்ந்துப்பார்க்கச்சொன்னார்கள்,
என் நினைவுகள் முந்தியடித்து எடுத்து கொடுத்தது
எனை மறந்து உன் முகம் பார்த்து மனம் உறைந்த அந்த காட்சிகளே,
பிழைப்பதில் நாட்டம் இல்லை
ஒவ்வொரு ஷனத்தையும் வாழ கொள்ளை ஆசை என்னக்கு
தேன் கூட்டில் ஒவ்வொரு துலளிலும் உள்ள தேனை ருசிப்பது போல்
வாழ்வின் அத்தனை இன்பங்களையும் உணர முயல்கிறேன்
அதனை உன்னோடு,
உன் சுவாசத்தின் வெப்பத்தில்,
விரல்களின் திண்டலில்,
காதலின் மயக்கத்தில் பகிர்ந்துகொள்ள
ஆசை படுகிறேன் இல்லை
விரும்புகிறேன் இல்லை
0 comments:
Post a Comment